Tamil Online Job

ஆங்கிலத்தில் ஆன்லைன் ஜாப் தளங்கள் இருக்கும் பொழுது தமிழ் ஆன்லைன் ஜாப் எதற்கு????

http://padugai.com/ என்ற இணையத்தளத்தில் கோல்டு  இருக்கும்  நான், அத்தளத்திற்கு No.1 Tamil Online Job Site என்று தான் பெயர் வைத்திருக்கிறேன்... அதாவது வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாக பணியினை தமிழ் மொழியில் செய்து சம்பாதிப்பதற்கான ஒர் தளமாகத்தான் 
http://padugai.com/ ஐ நினைக்கிறேன்,.

கணிணி பயன்படுத்தும் தமிழர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். மேலும் பலர் மழுமையான ஆங்கிலத்துடன் சிறப்பாக தங்களது பணிகளைச் செய்து கைநிறைய பணத்தையும் பார்த்து வருகின்றனர். ஆனால் அங்கே ஒருவன் தனது முழு திறமையினையும் காட்ட வேண்டும் என்றால் அவனுக்கு முதலில் துணைபுரிவது தாய்மொழி, இரண்டாவது தான் முழுமையாக கற்ற மொழி. இருக்கட்டும்...

தமிழ் ஆன்லைன் ஜாப் வழங்குகிறோம், என விளம்பரப்படுத்துவதால் ... தினமும் பலர் அதனைப் பற்றி விசாரிப்பது உண்டு. அதிலும் ஒர் சிலர் என்னிடம் தெளிவான விவரத்தை கேட்டுவிட்டு, இதனை ஏன் தமிழில் செய்கிறீர்கள்? ஆங்கிலத்தில் செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் அல்லவா? என்ற கேள்வியினை வைப்பார்கள்.

தொலைபேசி உரையாடல் என்பதால் அவர்களுக்கு உடனடியாக கொடுக்கும் பதில்கள், 


படுகை.காம் தமிழ் ஆன்லைன் ஜாப் களம் தான், ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் இணையத்தில் ஆயிரம் தளம் இருக்கின்றன, அவற்றை நாடவும்.

அல்லது

எனக்கு தமிழ் தாங்க தெரியும்... நான் தமிழில் செய்கிறேன், உங்களுக்கு விருப்பம் இருந்தால் செய்யுங்கள், இல்லை விட்டுவிடுங்கள்.


அல்லது, நல்ல மூடில் இருந்தால், பேச நேரமும் இருந்தால்...

சார், தமிழ் நாட்டில் நிறைய பணிகள் தமிழிலே தான் நடந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் கோடீஸ்வரனாக இருக்கும் பொழுது, இணையத்தில் அதே பணிகள் அனைத்தையும் செய்ய இருக்கும் நாங்கள் ஏன், கோடீஸ்வரனாக முடியாது?

கூகுள், யாகூ போன்ற தளங்கள், ஆங்கிலேயர்களின் ஆங்கில தளம் தானே? அவர்களிடம் நான் சென்று, சார் எனக்குத் தமிழ் தான் தெரியும்... நீங்கள் உங்களது பப்ளீசர் பணியினை அப்படியே தமிழில் கொடுங்கள் சார் எனக் கேட்க முடியுமா??

பேஸ்புக் என்ற தளம், அமெரிக்கரின் தளம் தானே??? அவர்கள் முதலில் தன் தளத்தினை ஆங்கிலத்தில் வெளியிட்டார்களா... அல்லது பிற மொழியில் வெளியிட்டார்களா? சரி, இன்று தமிழ் உள்பட பெருவாரியான மொழிகளில் அதன் பயன்பாடு கிடைக்கிறது என்பதற்காக, பேஸ்புக் நிறுவனர் ஜீகர்பெர்க் உங்களிடம் தமிழில் பேசுவாரா?

சார், ஒருவன் தனது முழுத் திறமையை காட்ட வேண்டும் என்றால் தேர்ந்தெடுக்கும் முதல் மொழி தாய்மொழி தான், பின் வேண்டும் என்றால் தேவைக்குத் தகுந்தவாறு பிற மொழியாக மாற்றம் செய்து கொள்ளலாம், இதில் ஒன்றும் பெரிய கடினமே இல்லை. ட்ரான்ஸ்லேட்டர் ஒருவரிடம் கொடுத்தால், என் தமிழ் ஆக்கங்களை அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்திடப்போகிறார். ஆகையால், ஆங்கிலத்தில் எந்த  தளத்தையும்  நடத்துவது என்பது மிக எளிது.

ஆக மொழி என்பது ஒர் பிரச்சனையே கிடையாது, உங்களுக்குத் திறமை இருக்குமாயின் அதனை எந்த மொழியில் வேண்டும் என்றாலும் சரியாக வெளிப்படுத்தினால் பணம் சம்பாதிக்க முடியும்.

உங்களுக்கு ஆங்கிலம் தான் தெரியும் என்றால், கூகுள், சிட்டிகா, அட்பிரைட் போன்ற பல தளங்கள் ஆங்கிலத்தில் பணியினைக் கொடுக்கின்றன.. அந்த தளங்களைப் பாருங்கள்... என்பது.

இப்படி பேசுவதற்காக, ஆங்கிலத்தில் செய்வதனால் பெரும் வருவாய் கிடைக்கும் என்பதனை தெரியாதவன் இல்லை. உலகில் உள்ள அனைத்து மக்களும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் இணையம் என வந்துவிட்டால் கண்டிப்பாக ஆங்கிலம் அறிந்திருப்பர். ஆகையால், தமிழ் மொழியினால் ஒர் சில கோடி மக்களிடம் பிசினஸ் பண்ணுவதைக் காட்டிலும்... ஆங்கில மொழியினால் கோடான கோடி மக்களிடம் பிசினஸ் பண்ணுவதனால் வருவாய் அதிகம் தான்.

தமிழ் ஆன்லைன் ஜாப்புக்கும் இங்கிலீஸ் ஆன்லைன் ஜாப்புக்கும் உள்ள வித்தியாசத்தை சுருக்கமாக சொன்னால்,

தமிழ் ஆன்லைன் ஜாப் என்பது சிறு குட்டையில் மீன் பிடிப்பது.
இங்கிலீஸ் ஆன்லைன் ஜாப் என்பது பெரும் கடலில் மீன் பிடிப்பது.


ஆகையால், தினமும் குட்டையில் மீன் பிடிக்கப் போராடுவதைக் காட்டிலும் கடலில் தூண்டிலை வீசினால் தினம் தினம் நிறைவான மீன் கிடைக்கும் என்பது உண்மை தான்.


ஆனாலும் நான் தமிழ் ஆன்லைன் ஜாப் எனத் தேர்ந்தெடுக்க காரணங்கள், என்ன என நீங்கள் கொஞ்சம் Guess பண்ணி பாருங்களேன்...

அப்படியே, மீண்டும் எவரேனும் இவ்வாறு, சார், ஏன் சார் தமிழில் செய்கிறீர்கள், ஆங்கிலத்தில் செய்யலாம் அல்லவா எனக் கேட்டால் நான் என்ன பதில் சொல்லலாம்னும் சொல்லுங்களேன்... ப்ளீஸ்..


ஆங்கிலத்தில் ஆன்லைன் ஜாப் தளங்கள் இருக்கும் பொழுது தமிழ் ஆன்லைன் ஜாப் எதற்கு????

கேள்வியை இப்படியும் நாளை எவரேனும் கேட்கலாம்... ஆகையால் மொத்தமாக பதில் சொல்லுங்க... உங்கள் வாயிலாக பதில் கொடுக்க தயாராகிறேன்... ஏனென்றால் எனக்கே சரியாக என்ன சொல்வது என்று தெரியவில்லை...


http://padugai.com/


No comments:

Post a Comment