Monday, December 25, 2017

பேஸ்புக் மார்க்கை வாட்டிய பிரதர்ஸ் பிட்காயின் மூலம் இப்போது பில்லியனர்!

பிட்காயின்
மார்க் ஸுக்கர்பெர்க். ஃபேஸ்புக் நிறுவனருக்கு ஏராளமான சாதனைக்கதைகள் சொந்தம். கூடவே ஒரு மிகப்பெரிய பிராதும் அவர்மீது உண்டு. அது, ஃபேஸ்புக் ஐடியாவை தனது நண்பர்களிடமிருந்து களவாண்டு விட்டார் என்பதே. அந்த நண்பர்கள் இரட்டையர்கள். டைலர் மற்றும் கேமரூன் (Tyler Winklevoss and Cameron Winklevoss) என்ற அந்தச் சகோதரர்கள் இப்போது செய்தியில் இடம்பிடித்திருக்கிறார்கள். காரணம், பிட்காயின்
என்ன செய்தார்கள் இந்த பிரதர்ஸ்?
2013-ம் ஆண்டு தங்களிடமிருந்த 11 மில்லியன் டாலரை பிட்காயினில் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்திய ரூபாயில் 70 கோடி. இந்த நான்கு வருடங்களில் பிட்காயினின் வளர்ச்சி அசாத்தியமானது. அதனால், இப்போது அவர்கள் பில்லியனர் ஆகிவிட்டார்கள். அவர்கள் முதலீடு செய்த அந்த 11 மில்லியன் 4 ஆண்டுகளில் 1 பில்லியன் ஆகியிருக்கிறது. இந்திய ரூபாயில் 6400 கோடி. கடந்த சில மாதங்களில் மட்டும் பல ஆயிரம் டாலர்கள் முன்னேறி வருகிறது பிட்காயின். ஒரு பிட்காயின் 120 டாலராக இருந்தபோது இவர்கள் அதில் முதலீடு செய்தார்கள். இன்றைய நிலவரப்படி ஒரு பிட்காயினின் விலை கிட்டத்தட்ட 11000 டாலர். 100 மடங்கு, நான்கே ஆண்டுகளில்.
இதுவரை ஒருமுறை கூட பிட்காயினை இவர்கள் விற்றதில்லை. வாங்குவது மட்டுமே இவர்கள் வேலை. 2013-ம் ஆண்டு கணக்குப்படி உலகிலிருந்த பிட்காயின் எண்ணிக்கையில் 1 % இவர்களிடம்தானிருந்தது. பிட்காயின் மூலமாக முதன் முதலில் பில்லியனர் ஆகியிருப்பதும் இவர்கள்தான். 
பிட்காயின்

முதலீட்டோடு நிறுத்தாமல் 2015-ல் பிட்காயினுக்காக ஒரு எக்சேஞ்சையும் உருவாக்கினார்கள். தொடர்ந்து, பிட்காயினுக்குத் தம்பியான எத்தீரியம் கரன்ஸியிலும் முதலீடு செய்தார்கள். 2016ல் தங்களது பரிமாற்றச் சேவைகளை இங்கிலாந்துக்கு விரிவுப்படுத்தினார்கள். அப்போதே ஒரு பேட்டியில் டைலர்  “பிட்காயின்தான் எதிர்காலத்தின் மிகப்பெரிய சோஷியல் நெட்வொர்க் ஆகும்” என்றார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு சின்ன இடைவெளி இருக்கிறது. அதை க்ரிப்டோகரன்ஸிக்களால்தான் நிரப்ப முடியும். இவை எதிர்காலத்தில் உலகப் பொருளாதாரத்தையே மாற்றி எழுதும் என இந்தச் சகோதரர்கள் உறுதியாக நம்புகிறார்கள். பங்குகளுக்காக இருக்கும் வால் ஸ்ட்ரீட் போல, டிஜிட்டல் கரன்ஸிக்களுக்காக விரைவில் ஒரு மார்க்கெட்டை இவர்கள் உருவாக்கவிருக்கிறார்கள்.
இப்போது பில்லியனர் ஆகிவிட்டாலும், தங்களது எதிரி(?) மார்க்கை எட்ட இன்னும் 72 மடங்கு அதிகமாக வேண்டும் பிட்காயின். ஏனெனில், மார்க்கின் இன்றைய சொத்து மதிப்பு 72.2 பில்லியன் டாலர்கள்.
மார்க்குடனான பஞ்சாயத்து:
36 வயதாகும் இந்தச் சகோதரர்களும் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் படித்தவர்கள். கல்லூரிகாலத்தில் தங்களது கல்லூரி நண்பன் திவ்ய நரேந்திராவுடன் இணைந்து HarvardConnect என்ற இணையதளத்தைத் தொடங்கினார்கள். பின்னர், அதுதான் ConnectU எனப் பெயர் மாறியது. இந்த ஐடியாவை சுட்டுதான் மார்க் ஃபேஸ்புக் தொடங்கியதாக வழக்கு தொடர்ந்தார்கள். அதில் வெற்றி பெற்று 65 மில்லியன் டாலர் இழப்பீடும் பெற்றார்கள். இவர்களது நண்பன் திவ்ய நரேந்திரா அமெரிக்காவில் பிறந்தவர்தான். ஆனால், பெற்றோர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து அங்கு போய் செட்டில் ஆன இந்திய மருத்துவர்கள். இந்தப் பிரச்னைக்குப் பின் திவ்ய நரேந்திரா தனது இன்னொரு ஹார்வர்டு நண்பனுடன் இணைந்து SumZero என்ற முதலீடு தொடர்பான இணையதளத்தை நிறுவினார்.
ஹார்வர்ட் நண்பர்களைப் பார்த்தால் பொறாமையாகத்தான் இருக்கிறது.

எங்கு இலவசமாக பிட்காயினை பெற்றுக் கொள்வது???

அதற்கு நீங்கள் கீழ் உள்ள இலவசபிட்காயின் தளத்தில் ரிஜிஸ்டர் செய்யுங்கள்.

உருவமில்லை... உலகத்தில் இல்லை... ஆனால், கரன்ஸிகளின் கடவுளா 'பிட்காயின்'?


மீபகாலமாக இணையத்தில் அதிகமாகப் பார்க்க முடிந்த சொல் “பிட்காயின்”. இது ஒரு டிஜிட்டல் கரன்ஸி என்பதால் நிஜ உலகில் இருப்பதை விட, விர்ச்சுவல் உலகில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. “எதிர்காலம் இவைதான். நிஜ கரன்ஸிகளை விட இவை பலம் வாய்ந்தவை” என்கிறார் பில் கேட்ஸ். 
இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் மதிப்பு 7000 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயில் 4,80,000. 2016ல் இதன் மதிப்பு 60,000 மட்டும்தான். ஒரே ஆண்டில் 8 மடங்கு முன்னேற்றம்.
அடிப்படையில் டிஜிட்டல் கரன்ஸிக்கும் பிட்காயின் போன்ற க்ரிப்டோகரன்ஸிக்கும் வித்தியாசம் உண்டு. இந்தியா கூடத்தான் டிஜிட்டல் கரன்ஸிக்கு மாறிவிட்டது என நினைக்க வேண்டாம். அது நிஜ கரன்ஸியின் டிஜிட்டல் வடிவம். அதாவது, 100 ரூபாய் நோட்டை கையில் எடுத்துச் செல்லாமல் டிஜிட்டலாக பரிவர்த்தனை செய்கிறோம். ஆனால், 100 ரூபாய் என்பது தாளாலான நோட்டுதான். ஆனால், க்ரிப்டோகரன்ஸி எனப்படுபவை முழுமையான டிஜிட்டல் கரன்ஸி. அவை டிஜிட்டலாக உருவாக்கப்பட்டு, டிஜிட்டலாகப் புழக்கத்தில் விடப்படுபவை.
உலக அளவில் பிட்காயின்கள் அதிகப் புழக்கத்தில் இருப்பது அமெரிக்காவில்தான். அடுத்த இடத்தில் சீனாவும், மூன்றாமிடத்தில் இந்தியாவும் இருக்கிறது. "இந்தியாவில் பிட்காயினா" என்ற ஆச்சர்யம் எழுந்ததும், சென்னையில் யாராவது இருக்கிறார்களா எனத் தேடினேன். விஷ்ணு என்ற இளைஞர் பிட்காயின் டிரேடிங்கில் இருப்பது தெரிய வந்தது. அவரிடம் பேசினேன்.
பிட்காயினின் ஆகச் சிறந்த அம்சமே அதை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை டிராக் செய்ய முடியாது என்பதுதான். இந்தியாவில் இதற்கென இருக்கும் ஏஜென்சிகள் மூலம் வாங்கினால் நம் பான் கார்டை கேட்கிறார்கள். அதன் மூலம் இந்திய அரசு எவ்வளவு ரூபாய்க்கு யார் பிட்காயின்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பதை அறியலாம். ஆனால், இந்த முறையில் வாங்குபவர்கள் சொற்பமானவர்கள்தான். மேலும், ஒருவர் அப்படி வாங்கி இன்னொருவருக்கு விற்றுவிட்டால் அந்த பிட்காயின் அப்போது யாரிடம் இருக்கும் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. இந்தச் சிதம்பர ரகசியம்தான் பிட்காயினில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்குகிறது. 
டிஜிட்டல் கரன்ஸி என்றால் எப்படி இருக்கும். புகைப்படமாகவா, பிடிஎஃப் ஆகவா என்ற சந்தேகத்தை விஷ்ணுவிடம் கேட்டேன்.
"பிட்காயின் என்பது ஒரு ஆல்ஃபா நியூமரிக் நம்பர்தான். இதை வாலட்ல சேமிச்சு வைக்கலாம். எக்ஸேஞ்ச் மூலமா வாங்கினா அவங்களோட வாலட்ல்யே ஸ்டோர் பண்ணி வைக்க வசதி உண்டு. இல்லைன்னா, பாதுகாப்பான ஆன்லைன் வாலட்ல சேமிச்சு வைக்கலாம். பென் டிரைவ் மாதிரியான ஆஃப்லைன் வாலட்டும் இருக்கும். நிறைய பிட்காயின் கைவசம் வெச்சிருக்கிற நிறுவனங்கள் தங்களோட காயினை அந்த ஸ்டோரேஜ் டிவைஸ்ல ஸ்டோர் பண்ணி லாக்கர்ல வெச்சுப்பாங்க. ஹேக்லாம் பண்ணி பிட்காயினை எடுக்க முடியாது. மீறி எடுத்தாலும் அதை ரெகவர் பண்ணவும் வழியிருக்கு" என்றார். 
பிட்காயின் முதலீடு பங்குச்சந்தையை விட பாதுகாப்பானது எனச் சொல்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் பங்குகளை சில ஆயிரம் பேர்தான் வைத்திருப்பார்கள். அதன் விலையை ஏற்ற இறக்க நினைத்தால் செய்துவிடலாம். வரலாற்றில் அதற்கான பதிவுகளும் உண்டு. காரணம் அந்த டிரேடிங்கில் பங்குகொள்ளும் மதிப்பும், நபர்களும் ஒப்பீட்டளவில் குறைவு. ஆனால், பிட்காயின் உலகம் முழுவதும் புழங்கும் ஒரு விஷயம். ஒவ்வொரு நொடியும் பல கோடிகளில் பரிவர்த்தனை நடக்கிறது. அவ்வளவும் ரகசியமாக நடக்கிறது. அதனால், இதன் மதிப்பை ஒரு சிலராலோ அல்லது ஒரே நாளிலோ மாற்றுவது என்பது முடியாத காரியம். 
பிட்காயினை நம்புவதிலும் நிறைய பிரச்னைகள் உண்டு. சமீபத்தில் இதன் மதிப்பில் சரிவு ஏற்பட்டது. இது உலக அளவிலான மதிப்பு. ஆனால், இந்தியாவில் மட்டும் அதிகம் குறையவில்லை. காரணம், இந்தியாவில் பிட்காயின் சமீபத்தில் புகழ்பெற்றதால் நிறைய பேர் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். அதனால், இந்தியாவில் மட்டும் இதன் டிமாண்ட் அதிகரித்தது. பிட்காயினை விற்கும் எக்ஸ்சேஞ்கள் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்றன. டிஜிட்டல் கரன்ஸி என்றால் உலகம் முழுவதும் ஒரே விலைதானே இருக்க வேண்டும் என்ற சந்தேகம் இதனால் எழுகிறது. ”பிட்காயினை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்” என தினமும் யாராவது ஒருவர் சமூக வலைதளத்தில் எழுதிக்கொண்டேதானிருக்கிறார்.
விஷ்ணுவும் இதைப் பற்றி புரிந்துகொள்ள டெக்னிக்கல் விஷயங்கள் தெரிய வேண்டுமென்றார். "கொஞ்சம் டெக்னிக்கலா விஷயம் தெரிஞ்சவங்க மட்டும்தான் இதைப் புரிஞ்சிக்க முடியும். ஏதாவது ஒரு சந்தேகம்னாலும் இந்த மொத்த புராசஸையும் தெரிஞ்சாதான் அடுத்தகட்டத்துக்கே போக முடியும். அதை ஒரு குறையா சொல்லலாம். சில பேரு இது தீவிரவாதிங்க பயன்படுத்துற கரன்ஸின்னு சொல்றாங்க. நாம பயன்படுத்துற ரூபாய், டாலர்லாம் அவங்ககிட்ட இல்லைன்னு சொல்ல முடியுமா. அப்புறம், இதை டிராக் பண்ண முடியாதுன்றதும் சிலருக்கு நெகட்டிவா தோணலாம். மத்தபடி பிட்காயின்ல எனக்கு எதுவும் குறையா தோணல பாஸ்" என்றார். 

பிட்காயினைப் பற்றிய FAQ:
1) பிட்காயினுக்கு உருவம் உண்டா?
கிடையாது. யாராவது அச்சடிக்கப்பட்ட தாள்கள் அல்லது வில்லைகளைக் காட்டி இதுதான் பிட்காயின் என்றால் நம்பாதீர்கள். பிட்காயின் என்பது முழுக்க முழுக்க டிஜிட்டலால் ஆனது.
2) பிட்காயினைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்ய முடியுமா?
அமெரிக்காவில் விமான டிக்கெட் முதல் பீட்ஸா வரை எதை வேண்டுமென்றாலும் பிட்காயின் கொடுத்து வாங்க முடியும். இந்தியாவிலும் சில இணையதளங்கள் இப்போது பிட்காயினை ஏற்கின்றன.
3) ஒரு பிட்காயினே 3 லட்சம் என்றால், அதற்குக் குறைவாகப் பணம் இருப்பவர்கள் வாங்க முடியாதா?
வாங்கலாம். பைசாவைப் போல பிட்காயினிலும் சில்லறை உண்டு. 10 பிட்டிஷ், 20 பிட்டீஷ் என வாங்கலாம்.
4) பிட்காயின் தடை செய்யப்பட்ட நாடுகள் எவை?
பங்களாதேஷ், பொலிவியா, ஈகுவேடார் மேலும் சில நாடுகள். சீனா சமீபத்தில் தடை விதிக்கப்போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்தத் தடை உள்நாட்டு எக்ஸேஞ்சில் பிட்காயினை மாற்றுவதற்கு மட்டுமே. டிஜிட்டலாக தடை என இதுவரை சொல்லவில்லை.
5) இப்போது உலக அளவில் இருக்கும் பிட்காயினின் மொத்த மதிப்பு எவ்வளவு?
15 லட்சம் கோடி. பிட்காயினின் மதிப்பு உயர்ந்துக்கொண்டே போவதால் இதன் மதிப்பு நாளுக்கு நாள் உயரும்.
6) நான் எப்படி பிட்காயினை வாங்க முடியும்?
  அ) ஒரு பொருள் அல்லது சேவைக்கான கட்டணமாக வாங்கலாம்
  ஆ) எக்ஸேஞ்சில் பிட்காயினை வாங்கலாம்
  இ) பிட்காயின் வைத்திருப்பவர்களிடம் பணம் தந்து வாங்கலாம்.
  ஈ) மைனிங் செய்யத் தெரிந்தால் செய்யலாம் அல்லது செய்யத் தெரிந்தவர்களிடம் கூடுதல் பணம் கொடுத்து வாங்கலாம்.
எங்கு இலவசமாக பிட்காயினை பெற்றுக் கொள்வது???

அதற்கு நீங்கள் கீழ் உள்ள இலவசபிட்காயின் தளத்தில் ரிஜிஸ்டர் செய்யுங்கள்.
அரசியல்வாதிகளுக்கு கை கொடுக்கும் பிட் காயின்!

ண்டைய காலத்தில்  பண்ட  மாற்று முறையில் ஆரம்பித்த வர்த்தகம், பின்னர் நாணய வர்த்தகமாக மாறுதல் அடைந்து, நாணயமும் கரன்ஸி நோட்டுக்களாக ஆனபின், அதுவும் முன்னேற்றம் கொண்டு கிரிடிட், டெபிட் கார்ட், டிராவலர்ஸ் செக் மற்றும் SODEXO PASS என்று பல முகம் காட்டி, கடைசியாக 'e trading'-ல் வந்து நின்றது. இதன் அடுத்தக் கட்ட முன்னேற்றம்தான் இந்த பிட் காயின்.

பெயர் ஒரு குறியீடு அல்ல. காயின் என்றே சொல்லப்பட்டாலும், இதற்கு வடிவம் கிடையாது. ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டை கைகளில் வைத்து 'சர்...' என்று உதறிப்பார்ப்பது போல் செய்ய முடியாது அல்லது நாணயம் போல் கிணுகிணுத்து கொட்டி அள்ள முடியாது.

அப்படி என்றால் 'Virtual Currency'யா...?, இது என்ன புது கரன்ஸி...? அதாவது நாம் நம் ரூபாய், யூரோ, டாலர்... இப்படி எல்லாவித கரன்ஸிகளையும் வாங்கி, விற்க முடியும். அவற்றை கண்களால் பார்க்காமல், கைகளால் தொடாமல் 'e trading'. இப்படியான ஒரு கரன்ஸிதானே பிட் காயின் என்கிற கேள்விக்கு பதில்....
ஆமாம்... ஆனால், இல்லை! குழப்பமாக இருக்கிறதா?

ரூபாய், யூரோ, டாலர் இப்படி எல்லாவித நாணயங்களும் அந்தந்த நாட்டில் அச்சடிக்கப்படுகின்றன. இந்த அச்சடிப்பு, அந்நாட்டின் சென்ட்ரல் வங்கிகளினால் செய்யப்படுகிறது. நம் நாட்டை எடுத்துக்கொள்வோம். நம் கைகளில் உள்ள பணப்புழக்கம் குறைவதற்கோ, அதிகமாவதற்கோ வேண்டிய நடவடிக்கையை எடுப்பது ரிசர்வ் வங்கி. ஆனால், இந்த பிட் காயினைப் பொறுத்தவரை யாராலும் மையப்படுத்தப்படவில்லை (centralized).

தொடர்புடைய படம்
ஆகவே அதன் இருப்பு, தேவையைப் பொறுத்தே அமையும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வெளிநாட்டு டாலர் அளவைக்குறைக்க, வட்டி விகிதத்தை கட்டுக்குள் கொண்டு வர போன்ற காரணங்கள் இதற்கு ஒத்து வராது. இந்த ஒன்றே பிட் காயின் பழக்கத்தில் வர முக்கிய காரணமாகும்.

சரி, நாட்டின் பொருளாதாரப் பிரிவு பிட் காயினை  ஏற்படுத்தவில்லை. பின் அது எப்படி முளைத்தது?

மின்பொருள் உருவாக்கும் சடோஷி நாகாமோட்டோ என்பவரால், 2009-ம் ஆண்டு, கணித நிரூபணம் என்ற நோக்கில் மின்னணு கட்டண முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படை 'cryptography'.
(Cryptography is a method of storing and transmitting data in a particular form so that only those for whom it is intended can read and process it.)

அதாவது, நம் ரூபாயை எடுத்துக்கொள்வோம். அதன் அடிப்படை தங்கம் அல்லது வெள்ளி அல்லது டாலர் கையிருப்பு. நம் கையிருப்பை வைத்து அதற்கு உண்டான நாணயம்/கரன்ஸிதான் அச்சடிக்க முடியும். ஆனால், இந்த பிட் காயின்ஸ் என்பதே சில மின்னணுக்களின் மாறுதல்களே. ஆக, ஒரு கம்ப்யூட்டர் வழி உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் (software) இந்த வர்த்தகத்தின் நாடி.

கணித சூத்திரத்தில் உருவாக்கப்படுவதால், இதன் அடிப்படை தங்கமோ, வெள்ளியோ இல்லை. இந்த கணித சூத்திரத்தில் 21 மில்லியன் பிட் காயின்கள் வரைதான் உருவாக்க இயலும். ஆனால், ஒரு பிட் காயின் சிறு பாகமாக குறைக்கப்பட்டு, மிகச்சிறிய அளவான, one hundredth million of a bit coin உபயோகத்தில் உள்ளது. இது நம் ஆயிரம் ரூபாய் நோட்டை, ஆயிரம் ஒற்றை ரூபாயாக மாற்றுவது போல. இந்த மிகச்சிறிய அளவான பிட் காயின் பெயர் சடோஷி. இந்த கணித சூத்திரம் open source. அதாவது யார் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கலாம்.

இந்த முறையில் பரிவர்த்தனை நடத்த ஒரு சமூகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சமூகத்தில் (community) யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம். 

உங்களுக்கு இந்தக் கேள்வி எழலாம். பணம் புழக்கத்தில் இருக்கும் போது எதற்காக இந்த பிட் காயின்ஸ்? இதற்கான பதிலைப் பார்ப்போம்.

ஒரு பேமெண்ட் வங்கி ஆரம்பிக்கவேண்டுமானால் கூட ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவை. வங்கியை விடுங்கள், அந்த வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்க நாம் சென்றால், பான் கார்டு, முகவரி அட்டை, ஒரு வழி மொழியாளர் இன்னும் பல விவரங்கள் கேட்கப்பட்டு, நாம் கணக்கு துவங்கும் போது சீனியர் சிட்டிசன் ஆக ஸ்டேட்டஸ் மாற்றும்படி ஆகிவிடும். ஆனால், இங்கே ஒரு கேள்வியும் கேட்கப்படுவதில்லை.

தொடர்புடைய படம்

இது மட்டுமல்ல, ஒருவரே எவ்வளவு பிட் காயின் அட்ரஸ் வேண்டுமானாலும் ஏற்படுத்திக்கொள்ளலாம். முன்பெல்லாம் வருமான வரி ஏய்ப்புக்காக வைப்பு நிதிக்கணக்குகள் வேறு வேறு வங்கிகளில் துவக்கப்படும். ஆனால், இப்போது எல்லா வங்கிக்கணக்குகளும் பான் நம்பர் வைத்து அடையாளம் காணப்படுவதால், இந்த மாதிரியான வரி ஏய்ப்புக்கு வழி இல்லாமல் போய்விட்டது. இந்த பிட் காயின்சைப் பொறுத்தவரை இந்த தனி கணக்குகள் சிஸ்டம் தொடரப்படுகிறது. ஒன்றோடு ஒன்று இணைக்கப்படாது. இன்னும் சொல்லப்போனால் பெயர் முகவரி இப்படி ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. 

சரி, இந்த பிட் காயின் வாங்கி, விற்று, கையிருப்பு போன்றவற்றிற்கெல்லாம் அத்தாட்சி. நம் பாங்க் பாஸ்புத்தகம் போல ஒர் ஜெனரல் லெட்ஜர் உண்டு. இதன் பெயர் Block Chain. நாம் செய்யும் அத்தனை transactionகளும் இதில் கணக்கு வைக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் நாம் இதைப்பார்க்க முடியும். இந்த லெட்ஜர் triple எண்ட்ரி முறையைப் பயன்படுத்துகிறது. நம் double entry முறையை விட பாதுகாப்பானது என்று கூட சொல்லலாம்.

கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், வங்கியில் நாம் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு முறைக்கும் சர்வீஸ் சார்ஜ் ரூ.500 முதல் ரூ.2,500 வரை கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த பிட் காயின் முறையில் எந்த கூடுதல் வசூலிப்பும் கிடையாது. ஆனால், பிட் காயினில் ஒரு முறை அனுப்பிவிட்டால் அதை ரத்து செய்ய இயலாது. டிடி போல் ரத்து வசதிகள் இதில் கிடையாது.

சரி Crypto currency, அதாவது cryptography வழியாக உருவாக்கப்பட்டு, அதன் வழியே கட்டுப்படுத்தப்படும் ஒரு நாணயம் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

இந்த பிட் காயின் ஒரு சாதாரண பயனீட்டாளர் பார்வையில் ஒரு மொபைல் App. ஒரு சொடக்கிட்டு பணம் அனுப்பி விடலாம் ஆனால், இந்த கம்ப்யூட்டர் புரோகிராம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிட் காயினின் வாலெட் (wallet) ஏற்படுத்துகிறது. இதன் மூலம் நாம் பிட் காயின் வாங்கலாம், விற்கலாம், கொடுக்கலாம். இப்படி பணம் பெற அல்லது அனுப்ப உப்யோகப்படுத்த வேண்டியது டிஜிட்டல் கையெழுத்து. இப்படி உபயோகப்படுத்தும்போது சில specialized hardware  உபயோகப்படுத்தினால் அதற்கு வெகுமதியாக சில பிட் காயின்ஸ் கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு கொடுப்பதற்கு mining என்று பெயர். அட இது வேற ஒண்ணும் இல்லை... இப்ப உங்க டெபாசிட்டை சில கம்பெனிகள் மூலமாகப் போட்டால் இன்சென்டிவ் என்னும் ஊக்கத்தொகை கிடைக்குமல்லவா, அது போலத்தான்!
1. வாங்கும் பொருட்களோ, சேவைகளுக்கோ, அதற்கான விலையாக கொடுக்கும்போது.

2. பிட் காயின் சந்தையில் நேரடியாக வாங்க முடியும்.

3. தெரிந்தவரிடம் பணத்திற்கு மாற்றாக பெறமுடியும்.

முதலில் சொன்னது போல competetive mining. இந்த பிட் காயின் மார்க்கெட்டும் நம் கரன்ஸி மார்க்கெட் போலத்தான். பிட் காயினின் விலையை நிர்ணயிப்பது டிமாண்ட் சப்ளை சுழற்சிதான். தேவை அதிகமாக இருந்தாலோ அல்லது இருப்பு குறைந்தாலோ, விலை ஏறும்.
பிட்காயின் வருமானவரிக்கு உட்பட்டவைதான். ஆனால், நம் நாட்டு வரி சட்டத்தில் இன்னும் கொண்டு வரப்படவில்லை. அதனால் இது பற்றி இப்போது ஒன்றும் சொல்ல முடியாது.

சட்டப்படி பிட் காயின் குற்றமா, சட்ட விரோதமா என்றால், அர்ஜெண்டினா, ரஷ்யா போன்ற சில நாடுகளில் இவற்றைத்தடை செய்திருக்கிறார்கள். நம் நாட்டில் இது பற்றி பேசப்பட்டாலும் இன்னும் தடை விதிக்கப்படவில்லை.

சரி இந்தக் கட்டுரைக்கான முக்கியமான காரணத்திற்கு வருவோம். ஒரு வாரம் முன்பு வந்த செய்தியில்,  மைசூரில் நிறுவனம் ஒன்றில், கம்ப்யூட்டர் க்ராஷ் ஆகிவிட, அதை சரி செய்ய ஒரு 'சாவி' தேவைப்பட்டது. ஆனால், அதற்கு நிறையப்பணம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்று பிளாக்மெயில் செய்யப்பட்டு, அந்தப்பணம் பிட் காயினாக கொடுக்கப்பட்டது.

இதில் என்ன புதுசு என்றால், இவை யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டன என்பதை கண்டு பிடிக்கவே முடியாது. தற்போது நடக்கவிருக்கும் தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள். தெருவில் பெட்டியில் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும். ஆனால் பிட் காயினாகக் கொடுத்தால், யார் யாருக்கு எப்போது கொடுத்தார்கள் என்பதை சைபர் கிரைம் கூட கண்டுபிடிக்க முடியாது.

ஆக, பிட் காயின் புழக்கத்தில் வந்தால் அவை சட்ட விரோதச்செயல்களுக்கு அதிகமாக பயன்படலாம். இதற்கான தனி பாதுகாப்பு சட்டம் தேவை.
அதற்கு நீங்கள் கீழ் உள்ள இலவசபிட்காயின் தளத்தில் ரிஜிஸ்டர் செய்யுங்கள்.